பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை பி.இ.எம்.எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 21 AUG 2024 11:57AM by PIB Chennai

இந்திய கடற்படை மற்றும் பி.இ.எம்.எல் லிமிடெட் ஆகியவை கடல் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளின் உள்நாட்டு மயமாக்கலை அதிகரிக்க இணைந்து செயல்படுகின்றன.

இது இந்திய கடற்படையின் முக்கிய கடல்சார் பொறியியல் கருவிகளை உள்நாட்டு மயமாக்குவதை நோக்கிய ஒரு பெரிய படி இதுவாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள 'அட்டவணை ஏ' நிறுவனமும், இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் கனரக பொறியியல் உற்பத்தி நிறுவனமுமான பி.இ.எம்.எல் லிமிடெட் 2024, ஆகஸ்ட் 20 அன்று இந்திய கடற்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புதுதில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இந்திய கடற்படையின் அதிகாரி (D&R) ரியர் அட்மிரல் கே. சீனிவாஸ் மற்றும் பெங்களூர்  பிஇஎம்எல்--லின் திரு அஜித் குமார் ஸ்ரீவஸ்தவ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. முக்கியமான கடல்சார் பொறியியல் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, சோதனை மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த முயற்சி ஒரு முக்கிய படியாகும்.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியுடன் இணைந்த, இந்த ஒத்துழைப்பு பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவதையும், வெளிநாட்டு ஓ.இ.எம்.களை நம்பியிருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

PLM/RS/KR

(Release ID: 2047188


(Release ID: 2047216) Visitor Counter : 73