பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஶ்ரீ அரவிந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை
प्रविष्टि तिथि:
15 AUG 2024 2:05PM by PIB Chennai
சிறந்த தத்துவஞானியும், சிந்தனையாளரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமரின் பதிவு, ஸ்ரீ அரவிந்தரின் நீடித்த மரபு மற்றும் இந்தியாவின் தேசிய விழிப்புணர்வில் அவரது ஆழமான தாக்கத்தை எடுத்துக்காட்டியுள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடகச் செய்தியில், "ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த தத்துவஞானி, சிந்தனையாளர் மற்றும் ஆன்மீகத் தலைவராக நினைவுகூரப்படுகிறார். தேசிய விழிப்புணர்வுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துக் கொண்டே இருக்கிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க நாம் உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்..
*****
PKV/ KV
(रिलीज़ आईडी: 2045649)
आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Punjabi
,
Gujarati