தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய, இந்தியா தனது செழுமைவாய்ந்த பண்டைக்காலப் பாரம்பரியம் மற்றும் இலக்கியங்களை பின்பற்ற வேண்டும்:பிரதமர்
Posted On:
15 AUG 2024 12:29PM by PIB Chennai
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, பல்வேறு துறைகளிலும் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்ற பாடுபடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
உலக விளையாட்டுச் சந்தையில் முன்னோடி : இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய, இந்தியா தனது செழுமைவாய்ந்த பண்டைக்காலப் பாரம்பரியம் மற்றும் இலக்கியங்களை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். விளையாட்டிற்கு பெரும் சந்தை வாய்ப்புகள் உருவாகி வருவதால், இத்துறையில் நாம் புதிய சிந்தனைகளை புகுத்த வேண்டும் என்றார்.
“உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்க ஒவ்வொரு குழந்தையையும் நாம் ஈர்க்க வேண்டும், இந்திய குழந்தைகள், இளைஞர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களும், விளையாட்டு உலகிற்கு தலைமையேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்- இது விளையாடுவதில் மட்டுமல்ல, மாறாக நமது விளையாட்டுப் பொருட்களை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லவும் பாடுபட வேண்டும். அனிமேஷன் உலகிலும் நமது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045538
***
MM/RJ/KV
(Release ID: 2045571)