பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியுவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு

प्रविष्टि तिथि: 14 AUG 2024 5:51PM by PIB Chennai

ஹான் ஹாய் தொழில்நுட்பக் குழுமத்தின் (பாக்ஸ்கான்) தலைவர் திரு யங் லியுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். எதிர்காலத் துறைகளில் இந்தியா அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளை எடுத்துரைத்த திரு மோடி, இந்தியாவில் பாக்ஸ்கானின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

சமூக ஊடக தளமான 'எக்ஸ்' தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது:

ஹான் ஹாய் டெக்னாலஜி குழுமத்தின் (ஃபாக்ஸ்கான்) தலைவர் திரு யங் லியுவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எதிர்காலத் துறைகளில் இந்தியா அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளை நான் எடுத்துரைத்தேன். கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் அவர்களின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து நாங்கள் சிறப்பாக விவாதித்தோம்.

--- 

PKV/KPG/DL


(रिलीज़ आईडी: 2045399) आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam