தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தேவையற்ற அழைப்புகளைச் செய்யும் பதிவு செய்யப்படாதவர்கள் அல்லது தொலை சந்தைப்படுத்துவோர்களின் அனைத்து தொலைத் தொடர்பு வளங்களையும் துண்டிக்குமாறு அணுகல் சேவை வழங்குநர்களிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொள்கிறது
प्रविष्टि तिथि:
13 AUG 2024 3:42PM by PIB Chennai
அதிகரித்து வரும் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அனைத்து பதிவு செய்யப்படாதவர்கள் அல்லது தொலைச் சந்தைப்படுவோர்களிடமிருந்து வரும் குரல் விளம்பர அழைப்புகளை தடைசெய்ய வேண்டும் என்று அணுகல் சேவை வழங்குவோரை வலியுறுத்தியுள்ளது.
அணுகல் சேவை வழங்குநர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் பின்வருமாறு:
அனைத்து அணுகல் வழங்குநர்களும் இந்த உத்தரவுகளுக்கு இணங்கவும், ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16-ம் தேதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த வழக்கமான புதுப்பிப்புகளை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிராய் நிறுவனத்தின் இந்த தீர்க்கமான நடவடிக்கை தேவையற்ற அழைப்புகளை கணிசமாகக் குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு வளங்களைப் (எஸ்ஐபி / பிஆர்ஐ / பிற தொலைத் தொடர்பு வளங்கள்) பயன்படுத்தி பதிவு செய்யப்படாத அனுப்புநர்கள்/ பதிவு செய்யப்படாத தொலைசந்தைப்படுத்துவோர் ஆகியோரிடமிருந்து வரும் அனைத்து விளம்பர குரல் அழைப்புகளும் உடனடியாக நிறுத்தப்படும்;
எந்தவொரு பதிவு செய்யப்படாத அனுப்புநர் / பதிவு செய்யப்படாத தொலைசந்தைப்படுத்துவோர் அதன் தொலைத்தொடர்பு வளங்களை (எஸ்ஐபி/பிஆர்ஐ/ பிற தொலைத்தொடர்பு வளங்கள்) விதிமுறைகளை மீறி வணிக குரல் அழைப்புகளைச் செய்வதற்கு தவறாகப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டால்,
அத்தகைய அனுப்புநரின் அனைத்து தொலைத்தொடர்பு வளங்களும் விதிமுறை 25-ன்படி இரண்டு ஆண்டுகள் வரை அசல் அணுகல் வழங்குநரால் துண்டிக்கப்படும்;
அத்தகைய அனுப்புநர் ஒழுங்குமுறைகளின் விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் வரை அசல் அணுகல் வழங்குநரால் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்;
அனுப்புநரை தடுப்புப்பட்டியலில் சேர்ப்பது தொடர்பான தகவல்கள் டிஎல்டி இயங்குதளத்தில் உள்ள மற்ற அனைத்து அணுகல் வழங்குநர்களுடனும் 24 மணி நேரத்திற்குள் பகிரப்படும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த அனுப்புநருக்கு வழங்கிய அனைத்து தொலைத் தொடர்பு வளங்களையும் துண்டிப்பார்கள்.
விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ளபடி தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் காலத்தின் போது எந்தவொரு அணுகல் வழங்குநராலும் அத்தகைய அனுப்புநருக்கு புதிய தொலைத்தொடர்பு வளங்கள் ஒதுக்கப்படாது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044818
***
IR/RS/RR
(रिलीज़ आईडी: 2044852)
आगंतुक पटल : 112