விவசாயத்துறை அமைச்சகம்

இயற்கை பேரிடரால் சேதமடைந்த பயிர்கள் முழுமையாக காப்பீடு செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைகிறார்கள்: திரு சிவராஜ் சிங் சவுகான்

Posted On: 06 AUG 2024 3:54PM by PIB Chennai

மக்களவையில் இன்று பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், முந்தைய பயிர் காப்பீட்டுத் திட்டங்களில் பல குறைபாடுகள் இருந்தன என்று  கூறினார்.  முந்தைய அரசுகளில் பல பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தபோதிலும், போதுமான இழப்பீடுகள் இல்லை என்றும், காப்பீட்டுத் தொகை குறைவாக இருந்தது என்றும் தெரிவித்தார். இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு பல ஆட்சேபனைகள் இருந்தாக குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி புதிய பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார் என்று சொல்வதில் தாம் பெருமைப்படுவதாகவும் திரு சவுகான் மேலும் கூறினார்.

 

முன்னதாக, பயிர் காப்பீட்டுக்காக 3 கோடியே 51 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றும், தற்போது 8 கோடியே 69 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும்  கூறினார்.

 2.71 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

விவசாயிகள் ரூ.32 ஆயிரத்து 404 கோடி  3000 கோடி ரூ.32 ஆயிரத்து 404 கோடி முனைமைதை் தொகை செலுத்தியதாகவும்,  ரூ.1.64 லட்சம் கோடி அளவிற்கு காப்பீட்டுத் தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் திரு சௌகான் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042101

***

IR/RS/KR/DL



(Release ID: 2042292) Visitor Counter : 30