பிரதமர் அலுவலகம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் திரு. அன்ஷுமன் கெய்க்வாட் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
31 JUL 2024 11:59PM by PIB Chennai
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான திரு. அன்ஷுமன் கெய்க்வாட் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டிற்கு திரு. அன்ஷுமன் கெய்க்வாட் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் நினைவுகூரப்படுவார் என்றும், அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளர் என்றும் திரு மோடி கூறினார்.
இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"திரு. அன்ஷுமன் கெய்க்வாட், கிரிக்கெட் விளையாட்டிற்கு அவரது பங்களிப்பிற்காக என்றும் நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி."
BR/KR
***
(रिलीज़ आईडी: 2039986)
आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam