பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கார்கில் வெற்றி தினத்தில் பிரதமர் உரை

Posted On: 26 JUL 2024 1:26PM by PIB Chennai

பாரத் மாதா கி – ஜே!

பாரத் மாதா கி – ஜே!

மலைப்பகுதி முழுவதும் குரல் ஒலிக்கட்டும்

பாரத் மாதா கி – ஜே!

பாரத் மாதா கி –ஜே!

 வீரம் செரிந்த பூமியான  லடாக், கார்கில் வெற்றியின் 25-வது ஆண்டு நிறைவை இன்று (26.07.2024) கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த கார்கில் வெற்றி தினம் நாட்டிற்காக உயிர் நீத்தவர்களின் தியாகத்தை நமக்கு நினைவுபடுத்துவதாக உள்ளது. நாட்கள், மாதங்கள், ஆண்டுகள், தசாப்தங்கள், நூற்றாண்டுகள் கடந்தாலும், காலங்கள் மாறினாலும், நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்களது இன்னுயிரை ஈந்த வீரர்களின் பெயர் எப்போதும் அழியாது. நமது பாதுகாப்பு படைகளின்  பணியாற்றும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாடு எப்போதும் கடமை பட்டிருக்கிறது. இந்த நாடு அவர்களுக்கு என்றைக்கும் நன்றி உடையதாக இருக்கும்.

நண்பர்களே,

கார்கில் போரின் போது ஒரு சாதாரண குடிமகனாக நமது வீரர்களுடன் இருக்கும் பெரும்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று கார்கில் பூமியில் நான் மீண்டும் நிற்கிறேன் என்றால், இயற்கையாகவே அந்த நினைவுகள் என் மனதில் அழியாமல் உள்ளது தான் காரணம். நமது படையினர், எவ்வளவு உயரத்தில் போரில் ஈடுபட்டனர் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

கார்கில் போரில் நாம் சாதாரணமாக வெற்றி பெற்றுவிடவில்லை. உண்மை, பொறுமை மற்றும் திறனை திறம்பட வெளிப்படுத்தி வெற்றி பெற்றோம். அந்த நேரத்தில் இந்தியா அமைதியைத்தான் விரும்பியது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் பாகிஸ்தானோ, அதன் நம்பகமற்றதன்மையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது. தவறான பிரச்சாரங்களும், பயங்கரவாதமும், உண்மைக்கு முன்னால் மண்டியிட்டது.

பாகிஸ்தான் கடந்த காலத்தில் மேற்கொண்ட அனைத்து விபரீத முயற்சிகளிலும் தோல்வியைத்தான் தழுவியுள்ளது. ஆனாலும் வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றதாக தெரியவில்லை. அந்த நாடு இன்னும் தீவிரவாதத்தைத்தான் நம்பிக் கொண்டிக்கிறது. ஆனால் தற்போது நான் நின்று பேசி கொண்டிருக்கும் இடத்தில் தீவிரவாதத்தின் ஊற்றுகண்ணாக இருப்பவர்கள் எனது குரலை நேரடியாக  கேட்டு கொண்டிருப்பார்கள். தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்போரின் தீய எண்ணங்கள் ஒரு போதும் வெற்றி அடையாது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

***

(Release ID: 2037352)

MM/AG/KR

 


(Release ID: 2039544) Visitor Counter : 48