நிதி அமைச்சகம்
சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பெருமளவில் வெற்றியடைந்து, எளிய மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது: நிதியமைச்சர்
Posted On:
23 JUL 2024 1:08PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான சரக்குப் போக்குவரத்து செலவுகளை குறைத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி நடை முறை பெருமளவில் வெற்றிப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எளிதாக வர்த்தகம் செய்யும் வகையில், ஜிஎஸ்டி சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக, மதுபான உற்பத்தியிறல் பயன்படுத்தப்படும் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால், மத்திய வரியின் வரம்பில் கொண்டு வரப்படமாட்டாது என்று கூறினார். இது போன்ற திருத்தங்கள் ஐஜிஎஸ்டி மற்றும் யுடிஜிஎஸ்டி சட்டத்திலும் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 11ஏ, வர்த்தகத்தில் நிலவும் எந்தவொரு பொதுவான நடைமுறையின் காரணமாக, மத்திய வரி விதிக்கப்படாதது அல்லது குறுகிய கால வரி விதிப்பதை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய சரக்கு மற்றும் சேவைவரியின் (சிஜிஎஸ்டி) பிரிவு 16-ல் இரண்டு புதிய துணைப்பிரிவுகளைச் சேர்க்கப்பட்டதன் மூலம் உள்ளீட்டு வரி கடன் பெறுவதற்கான கால வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035593
***
MM/IR/RS/RR
(Release ID: 2035801)
Visitor Counter : 66