நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரி விதிப்பை எளிமையாக்கி வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்துதல்- அரசின் சீரான முயற்சி: மத்திய நிதியமைச்சர்

Posted On: 23 JUL 2024 1:09PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவது என்ற குறிக்கோளை நோக்கிய பயணத்தை விரிவுபடுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட 9 அம்சங்கள் மீது  சிறப்பு கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், இன்னும் 6 மாதங்களுக்குள் வருமான வரிச் சட்டம் 1961 விரிவாக மறு ஆய்வு செய்யப்படும் என்றார். அனைவரும் மனசாட்சிப்படி எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக மாற்றியமைக்கப்படும். ஜிஎஸ்டி, சுங்கவரி மற்றும் வருமான வரி விதிப்பு தொடர்பான அனைத்து சேவைகளும் 2 ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு காகிதம் இல்லா நடைமுறை உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

வருமான வரி மேல் முறையீட்டு வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண ஏதுவாக சமரச தீர்வு திட்டம் 2024 செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த நிதியாண்டிற்கான புள்ளி விவரங்களின்படி மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் புதிய தனிநபர் வருமான வரி திட்டத்தை பயன்படுத்துவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வருமான வரி சோதனை நடத்தி தொடரப்படும் வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான அவகாசம் 10 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால ஆதாயம் அளிக்கக்கூடிய குறிப்பிட்ட சில நிதி சொத்துக்கள் மீது 20 சதவீத வரியும், அனைத்து நீண்டகால ஆதாயம் அளிக்கக் கூடிய நிதி மற்றும் நிதி சாரா சொத்துக்களுக்கு 12.5 சதவீத வரியும் விதிக்கப்படும். ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள பட்டியலிடப்பட்ட நிதி சொத்துக்கள், நீண்ட காலம் உடையதாக வகைப்படுத்தப்படும்.

நேரடி வரி, ஆயத்தீர்வை  மற்றும் சேவை வரி தொடர்பான மேல் முறையீடு தாக்கல் செய்ய, வரி தீர்ப்பாயங்களில் ரூ.60 லட்சம் வரையிலான வழக்குகளுக்கும், உயர்நீதி மன்றங்களில் ரூ. 2 கோடி வரையிலான வழக்குகளையும் உச்சநீதிமன்றத்தில் ரூ.5 கோடி வரையிலான வழக்குகளிலும் மேல் முறையீடு செய்யலாம்.    மொத்த வரிவருவாயான ரூ.37 ஆயிரம் கோடியில், ரூ. 29 ஆயிரம் கோடி நேரடிவரியாகவும், ரூ.8 ஆயிரம் கோடி மறைமுக வரியாகவும் உள்ள வழக்குகளை தொடர்ந்து நடத்துவதற்கு பதிலாக அவை கைவிடப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வரையிலான வருவாய் கைவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

***

(Release ID: 2035595)

MM/AG/KR


(Release ID: 2035797) Visitor Counter : 86