நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, விரிவான வள மேம்பாடு, சமூக நீதி ஆகியவற்றுக்காக முழுமையான அணுகுமுறை பின்பற்றப்படும்

प्रविष्टि तिथि: 23 JUL 2024 12:52PM by PIB Chennai

விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் என அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு, சமூக நீதிக்காக திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றயும் வகையில் 'செறிவூட்டல் அணுகுமுறை' பின்பற்றப்படும் என 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தபோது மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய பட்ஜெட் 2024-25 மாற்றத்திற்கான ஆற்றலைக் கொண்ட  கருப்பொருள்களைக் கொண்ட இலக்குகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. விவசாயம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு, சமூக நீதி, உற்பத்தியும் சேவைகளும், நகர்ப்புற மேம்பாடு, எரிசக்திப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியும் மேம்பாடும், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் ஆகியவை அவையாகும்.

குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கைவினைக் கலைஞர்கள், சுய உதவிக் குழுவினர், பெண் தொழில்முனைவோர், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்குப் பயன் அளிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா, பிரதமரின் ஸ்வநிதி, தேசிய வாழ்வாதார இயக்கங்கள், ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டங்களை செயல்படுத்துவது முடுக்கி விடப்படும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

***

(Release ID: 2035571)

PLM/KR


(रिलीज़ आईडी: 2035753) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam