நிதி அமைச்சகம்
மின்சார சேகரிப்புக்கான கொள்கை மேம்படுத்தப்படும்
Posted On:
23 JUL 2024 12:52PM by PIB Chennai
புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் பங்கு அதிகரித்து வரும் நிலையில், மின்சாரச் சேகரிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான கொள்கை மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் எரிசக்தி மாற்றம் முக்கியமானது என்பதால், சூரிய மின்சக்தி செல்கள், தகடுகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கான மூலதனப்பொருட்கள் விலக்களிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படுவதாக மக்களவையில் தமது பட்ஜெட் உரையின் போது அவர் தெரிவித்தார்.
போதிய உள்நாட்டு உற்பத்திக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், சூரிய மின்சக்தி கண்ணாடி, காப்பர் போன்றவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பிரதமரின் சூரிய மின்சக்தித் திட்டத்தின்கீழ், ஒருகோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும். இந்த திட்டத்தில் 1.28 கோடி பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் மேலும் ஊக்கப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035574
***
SMB/KV/KR
(Release ID: 2035752)