நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீள்திறன் கொண்ட பொருளாதாரத்திற்கு சுகாதாரத் துறை முக்கியமானது

Posted On: 22 JUL 2024 2:47PM by PIB Chennai

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, நீண்டகால நிலைத்தன்மையுடன் கூடிய, மீள்திறன் கொண்ட சிறந்த சுகாதார அமைப்பு முக்கியமானது என்று மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை  சுட்டிக்காட்டுகிறது.

நோய்த் தடுப்பில் கவனம் செலுத்தி, தரமான சுகாதார சேவைகளை வழங்கி, அனைத்து வயதினருக்கும் சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய் அரசு முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கியத் திட்டம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைக்காக ஏழைக் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. 2024, ஜூலை 8 நிலவரப்படி, 34.73 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இவற்றில் 7.37 கோடி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் சந்தை விலையை விட 50 முதல் 90% வரை மலிவான விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 10,000-மாவது மருந்தகம் கடந்த ஆண்டு தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பவ் இயக்கம் செப்டம்பர் 2023-ல் தொடங்கப்பட்டது.  இந்த இயக்கம் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும்  நகரத்திலும் முக்கியமான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

-சஞ்சீவனி  தொலை மருத்துவ ஆலோசனை திட்டம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டதின் மூலம் இதுவரை 26.62 கோடி நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034933

-----

(Release ID: 2034933)

SMB/PLM/KPG/KR

 

 


(Release ID: 2035623) Visitor Counter : 70