நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2015-ல் 3.42 கோடியாக இருந்த உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 2022-ல் 4.33 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது, இது 2015-ல் இருந்ததை விட 26.5% அதிகமாகும்

Posted On: 22 JUL 2024 2:38PM by PIB Chennai

பள்ளிப் படிப்புக்கு பிறகு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. உயர்கல்வி குறித்த 2021-22-ம் ஆண்டுக்கான அகில இந்திய கணக்கெடுப்பின் படி, 2015-ல் 3.42 கோடியாக இருந்த உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை, 2021-ல் 4.14 கோடியாகவும், 2022-ல் 4.33 கோடி அளவுக்கும் அதிகரித்துள்ளது. இது 2015-ல் இருந்ததை விட 26.5%  அதிகமாகும் என மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் அதிகரிக்கும் சமத்துவம்

உயர்கல்வி பயில்வதற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கு, எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக அளவில் சேர்வதே காரணம். குறிப்பாக உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 1.57 கோடியாக இருந்தநிலையில், 2022-ல் 2.07 கோடியாக அதிகரித்துள்ளது. இது 31.6%  அதிகமாகும். இதன் மூலம் உயர்கல்வியில் சமத்துவம் அதிகரித்து வருவதோடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது.

டிஜிட்டல் தளங்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றல்

இந்தியாவில் 26.52 கோடி மாணவர்கள் பள்ளி படிப்பு படிப்பதாகவும், 4.33 கோடி பேர் உயர்கல்வியும் படிப்பதுடன், 11 கோடிக்கும் மேற்பட்டோர் திறன் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டமைப்பை விரிவுபடுத்தியதன் காரணமாக 14.89 லட்சம் பள்ளிகளும், 1.50 லட்சம் இடைநிலை பள்ளிகளும், 1.42 லட்சம் மேல்நிலைப்பள்ளிகளும், 1168 பல்கலைக்கழகங்களும், 45,473 கல்லூரிகளும், 12,002 தனித்துவ கல்வி நிறுவனங்களும் உள்ள நிலையில், இவற்றில் பள்ளிக் கல்வித்துறையில் 94.8 லட்சம் ஆசிரியர்களும், உயர்கல்வித் துறையில் 15.98 லட்சம் ஆசிரியர்களும் பணியாற்றுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழும் இந்தியா

இந்தியாவில் கல்வி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இத்துறையில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. 2024-ல் 1,00,000 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில் 2015-ல் 81-வது இடத்தில் இருந்த இந்தியா 2023-ல் 40-வது இடத்திற்கு முன்னோறியுள்ளது.

பிஎச்டி படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 81.2 சதவீதம் அதிகரித்து 2.13 லட்சமாக உள்ளது.

***

(Release ID: 2034925)

MM/AG/KR


(Release ID: 2035622) Visitor Counter : 48