நிதி அமைச்சகம்
உள்நாட்டு சேவைகள் வழங்கல் மற்றும் ஏற்றுமதியின் பன்முகத்தன்மை ஆகியவற்றில் விரைவான தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை இந்தியாவின் சேவைகள் காட்சிப்படுத்துகின்றன
Posted On:
22 JUL 2024 2:27PM by PIB Chennai
முக்கிய சேவைகளின் துறைவாரியான செயல்திறன் குறித்து விவாதித்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024-இல், "உள்நாட்டு சேவை வழங்கலில் விரைவான தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம் மற்றும் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதியின் பல்வகைப்படுத்தல் ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள், இந்தியாவின் சேவை சூழலை மாற்றியமைக்கின்றன", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சேவைத் துறை பரந்த அளவிலான பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கியது, அதை இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம்:
இயல் இணைப்பு அடிப்படையிலான சேவைகள்: வர்த்தகம், விருந்தோம்பல், போக்குவரத்து, மனை வணிகம், சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள்.
தகவல் தொழில்நுட்ப சேவைகள், தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள்: நிதி, தகவல் தொழில்நுட்பம், தொழில்முறை, தகவல் தொடர்பு, ஒலிபரப்பு மற்றும் சேமிப்பு சேவைகளள், பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு சேவைகள்.
ரயில்கள், பேருந்துகள், டாக்சிகள் மற்றும் விமானங்கள் வழியாக, பயணிகள் போக்குவரத்து முதல் கப்பல் நிறுவனங்கள், சரக்கு அனுப்புநர்கள் மற்றும் கூரியர் சேவைகளால் எளிதாக்கப்பட்ட சரக்கு போக்குவரத்து வரை பல்வேறு உள்கட்டமைப்பு வலையமைப்புகளில் சரக்குகள், மக்கள் மற்றும் தகவல்களின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வதற்காக எண்ணற்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் சரக்குகளில் கணிசமான பகுதி சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி, பல்வேறு முயற்சிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் பயனாளிகளின் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. பயனர்அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், ரயில் அமைப்பை திறம்பட நிர்வகிப்பதற்கும், வளர்ந்த இந்தியாவின் திறனை வளர்ப்பதற்கும் இந்திய ரயில்வே ஏராளமான சேவைகளை வழங்குகிறது. தினசரி கப்பல் மற்றும் சரக்கு நடவடிக்கைகளை நெறிப்படுத்த துறைமுகத் துறை சாகர் சேது செயலியைப் பயன்படுத்துவதுடன், அனைத்து கடல்சார் நடவடிக்கைகளுக்கும் முக்கிய மையமாக மாற விரும்புகிறது. இந்தியா மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக விலங்குகிறது. இந்தியாவில் விமானத் துறை கணிசமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதுடன், இந்திய விமான நிலையங்களில் கையாளப்படும் மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்து நிதியாண்டு 2024-இல் 37.6 கோடியை எட்டியுள்ளது.
இந்தியாவில் சுற்றுலாத் துறை வேகமாக விரிவடைந்து வருகிறது, உலகப் பொருளாதார மன்றத்தின் பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீடு 2024 இல் இந்தியா 39-வது இடத்தில் உள்ளது. மனை வணிகம் மற்றும் குடியிருப்புகளின் உரிமை கடந்த தசாப்தத்தில் ஒட்டுமொத்த மொத்த மதிப்பு கூட்டலில் (ஜி.வி.ஏ) 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது பொருளாதாரத்தில் அவற்றின் ஒருங்கிணைந்த பங்கை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த தசாப்தத்தில், தகவல் மற்றும் கணினி தொடர்பான சேவைகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன, மொத்த ஜி.வி.ஏ-இல் அவற்றின் பங்கு நிதியாண்டு 13-இல் 3.2 சதவீதத்திலிருந்து நிதியாண்டு 23-இல் 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைபேசி அடர்த்தி (100 மக்கள்தொகைக்கு தொலைபேசிகளின் எண்ணிக்கை) மார்ச் 2014 இல் 75.2 சதவீதத்திலிருந்து மார்ச் 2024 இல் 85.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய மின்னணு வர்த்தகத் துறை 2030-ஆம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034919
***
(Release ID: 2035564)
Visitor Counter : 63