நிதி அமைச்சகம்

2022-23-ல் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு 37% ஆக அதிகரித்துள்ளது

Posted On: 22 JUL 2024 2:41PM by PIB Chennai

பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளித்ததன் விளைவாக, அதிக அளவிலான பெண்கள்  கல்வி பெறவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறவும் அதிக வாய்ப்புகள் கிடைத்து நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்துள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  

வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருப்போரில், 55.6 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர். 83 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்,  தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் கீழ் 8 கோடியே 90 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.   பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட கடன்களில் 68% பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், 77.7% பெண்கள் பயனடைந்துள்ளனர்.  பிரதமரின் ஊரக டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் பயனடைந்தவர்களிலும் 53 சதவீதத்தினர் பெண்கள் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034928

*** 

SMB/MM/KPG/KR/DL



(Release ID: 2035188) Visitor Counter : 17