நிதி அமைச்சகம்

மருத்துவ சிகிச்சை, கடந்த சில ஆண்டுகளில் செலவு குறைந்ததாகவும், அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும் மாறியுள்ளது

Posted On: 22 JUL 2024 2:45PM by PIB Chennai

தேசிய சுகாதார கணக்குகள் மதிப்பீட்டின்படி, கடந்த சில ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சை என்பது செலவு குறைந்ததாகவும், பொது மக்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும் மாறியுள்ளது என  மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அரசின் சுகாதார செலவினங்களில், தொடக்கநிலை சுகாதார சேவைகளுக்கான செலவு 55.9% அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு கணக்கின்படி, பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதமும், பேறுகால இறப்பு விகிதமும் பெருமளவு குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் பாதிப்பு நிலவரத்தைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக, ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கும், மனநல ஆரோக்கியத்தைப் பேணவும், அரசும், பொது மக்களும்  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034932

*** 

SMB/MM/KPG/KR



(Release ID: 2035067) Visitor Counter : 26