பிரதமர் அலுவலகம்
டாக்டர் எம்.எஸ்.வலியதன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
19 JUL 2024 8:48PM by PIB Chennai
சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறையில் முன்னோடியான டாக்டர் எம்.எஸ். வலியதன் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறையில் முன்னோடியான டாக்டர் எம்.எஸ்.வலியதன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது பங்களிப்புகள் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளதுடன், எண்ணற்ற மக்களுக்கு பயனளித்துள்ளன. குறிப்பாக செலவு குறைந்த, உயர்தர கண்டுபிடிப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். இந்தியாவில் மருத்துவக் கல்வித் துறையை மேம்படுத்துவதில் அவர் முன்னணியில் இருந்தார். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், எண்ணற்ற அபிமானிகள் ஆகியோருடன் உள்ளன. ஓம் சாந்தி."
*****
PKV/DL
(रिलीज़ आईडी: 2034590)
आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam