சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கற்பிதமும், உண்மைகளும்
Posted On:
18 JUL 2024 6:37PM by PIB Chennai
யுனிசெப் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இதுவரை எந்த தடுப்பூசியும் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில், இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் குறித்த முழுமையற்ற (அரைகுறையான) தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏனெனில் இவற்றில் மக்கள் தொகை அடிப்படையிலான காரணிகள் மற்றும் பிற நாடுகளின் தடுப்பூசி இயக்கம் குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்த விவரங்களை கருத்தில் கொள்ளாமல், பிற நாடுகளுடன் தவறான வகையில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 0.11% குழந்தைகள் மட்டுமே இதுவரை எவ்வித தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர்.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 93.23% ஆக உள்ளது.
ஆண்டுக்கு 2.6 கோடி குழந்தைகள், 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கு 1.2 கோடி தடுப்பூசி முகாம்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் மட்டும் 2023-ம் ஆண்டு வரை 5.4 கோடி குழந்தைகளுக்கும் 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034080
***
MM/AG/DL
(Release ID: 2034115)
Visitor Counter : 57