சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ சாதனங்களின் ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே பி நட்டா ஆய்வு செய்தார்

Posted On: 17 JUL 2024 2:56PM by PIB Chennai

மருந்துகள் ஒழுங்குமுறையில் இந்தியா உலகளாவிய முன்னணி நாடாக மாறுவதற்கு, நமது செயல்பாடுகள் சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா கூறியுள்ளார். மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் முறைப்படுத்தப்படுத்துதலை ஆய்வு செய்வது குறித்த கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் (டிசிஜிஐ) டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மருந்துகளை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய திரு ஜே. பி. நட்டா, மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ தனது நடவடிக்கைகளின் மூலம் உலகத் தரத்தை அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரே மாதிரியான தன்மை, தொழில்நுட்ப மேம்பாடு, எதிர்கால அணுகுமுறை, மிக உயர்ந்த தரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மேம்பாடு தேவை என்று அவர் கூறினார்.

மருந்துகள், மருத்துவ சாதனங்கள் தொழில்துறையினரின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியம் என்று மத்திய சுகாதார அமைச்சர் கூறினார். "ஒழுங்குமுறை தேவைகளுக்கு உட்பட்டு மருந்து தொழில்துறைக்கு எளிதாக வணிகம் செய்வதை உறுதி செய்யும் வழிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று திரு ஜேபி நட்டா தெரிவித்தார்.

***

PLM/KV

 



(Release ID: 2033840) Visitor Counter : 18