இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய இளைஞர் விருது பெற்றவர்களுடனும் நாட்டு நலப்பணித் திட்ட விருது பெற்றவர்களுடனும் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
17 JUL 2024 2:12PM by PIB Chennai
தேசிய இளைஞர் விருது பெற்றவர்களிடனும் நாட்டு நலப்பணித் திட்ட விருது பெற்றவர்களுடனும் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று (17.07.2024) கலந்துரையாடினார். இந்த அமர்வு இந்த இளைஞர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதையும், மை பாரத் தளத்தை மேம்படுத்துவதற்கான உத்திகளைப் பற்றி விவாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக அமைந்தது.
நீடித்த வளர்ச்சி இலக்குகள், பருவநிலை மாற்றம், நகர்ப்புற திட்டமிடல், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், போதைப்பொருள் தடுப்பு போன்ற பணிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் விருது பெற்றவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து, அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டார். நாட்டின் வலுவான எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்களின் திறமைகளை அங்கீகரித்து மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பகுதி மை பாரத் தளத்தை மேலும் மேம்படுத்த கூட்டு யோசனைகளை வழங்கலாம் என்று கூறிய அமைச்சர், இது தொடர்பாக விருது பெற்றவர்களிடமிருந்து பரிந்துரைகளை வரவேற்றார். இளைஞர்களின் தேவைகளும் விருப்பங்களும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய இளைஞர்களுக்கும் அமைச்சகத்திற்கும் இடையே தொடர்ச்சியான தொடர்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் இளைஞர் நலத் துறைச் செயலாளர், இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
PLM/KV
(रिलीज़ आईडी: 2033832)
आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada