உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கௌரவ மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 16 JUL 2024 5:34PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கௌரவ மாநாட்டில் (பிச்ச்தா வர்க் சம்மான் சம்மேளன்) மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். ஹரியானா முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி, மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர்கள் திரு ராவ் இந்தர்ஜித் சிங், திரு கிரிஷன் பால் குர்ஜார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, ஹரியானா மண் இந்தியாவில் மூன்று விஷயங்களுக்கு பிரபலமானது  என்றார்.  ராணுவத்தில் அதிகபட்ச வீரர்கள், அதிக விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக உணவு தானிய உற்பத்தி ஆகியவற்றுக்கு ஹரியானா புகழ்பெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமராக திரு நரேந்திர மோடி பதவியேற்றபோது, இந்த அரசு, தலித்துகள், ஏழைகள், பின்தங்கியவர்களுக்கான அரசு என்று கூறியதை நினைவுகூர்ந்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதலாவது வலுவான பிரதமர் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள 71 பேரில், 27 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.  

இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஓபிசி சமூகத்திற்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் நீட் தேர்வுகளில் முதல் முறையாக 27 சதவீத இடஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக ஹரியானா அரசும் பல திட்டங்களை செயல்படுத்துவதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033695

***

PLM/KV/DL


(Release ID: 2033716) Visitor Counter : 74