பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் கண்டனம்

प्रविष्टि तिथि: 14 JUL 2024 9:15AM by PIB Chennai

அமெரிக்க முன்னாள் அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.07.2024) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

"எனது நண்பர், முன்னாள் அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலிலும், ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அமெரிக்க மக்களுடன் உள்ளன."

***

PLM/KV

 


(रिलीज़ आईडी: 2033138) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam