குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குடியரசு துணைத்தலைவர் ஜூலை 6 முதல் இரண்டு நாட்கள் கேரளாவில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 04 JUL 2024 2:32PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் 2024,  ஜூலை 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் கேரளாவில் பயணம் மேற்கொள்கின்றனர்.

முதல் நாளன்று, திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பக் கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு திரு தன்கர் உரையாற்ற உள்ளார். சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கவுள்ளார். அடுத்த நாள் கொல்லம், அஷ்டமுடி முகத்துவாரம் ஆகிய இடங்களுக்கு குடியரசு துணைத்தலைவர் செல்லவுள்ளார்.

***

Release ID: 2030662)

SMB/IR/RS/RR



(Release ID: 2030685) Visitor Counter : 25