பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹத்ரஸ் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர், பாதிக்கப்பட்டோருக்கு கருணைத்தொகை அறிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 02 JUL 2024 8:20PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் நகரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகையை அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

"ஹத்ரஸ் நகரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்."

----

SMB/KPG

 


(रिलीज़ आईडी: 2030309) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam