குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநிலங்களவையின் 264-வது அமர்வு இன்று தொடங்கியதையொட்டி, மாநிலங்களவைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் ஆற்றிய தொடக்கவுரை

Posted On: 27 JUN 2024 1:46PM by PIB Chennai

தலைவர்: மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 264-வது அமர்வு தொடங்குவதையொட்டி, உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.  இது, மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு நடைபெறும் முதலாவது அமர்வு ஆகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பாரதத்தின் மக்கள், அவர்களது வாக்குரிமையை  செலுத்திய வேளையில், நமது ஜனநாயக அரசியல் மற்றும் நமது குடியாட்சி முறையில் உள்ள நற்பண்புகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ‘ஜனநாயக திருவிழா’ வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது, நம் அனைவருக்கும் மிகுந்த பெருமிதத்தையும், வியப்பையும் அளிக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு, இந்த அவையும், ஓரளவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த அவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட / நியமிக்கப்பட்ட 61 உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். உறுப்பினர்கள் அவர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற  பங்களிப்பை வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகம் மேலும் வளர பாடுபடுவோம். ஜனநாயகத்தின் சாராம்சமான பேச்சு, விவாதம், உரையாடல் ஆகிய அனைத்து முறைகளும் செழித்தோங்க நமது பங்களிப்பை வழங்குவோம்.

***

MM/RS/KV



(Release ID: 2029092) Visitor Counter : 32