பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் டாக்டர் குல்பதி திவாரியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUN 2024 8:45PM by PIB Chennai

காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் டாக்டர் குல்பதி திவாரியின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர்  டாக்டர் திவாரி  அவர்கள் காலமானார் என்ற வருத்தமான செய்தி கிடைத்தது. டாக்டர் குல்பதி அவர்கள் பாபா விஸ்வநாதருக்கு நீண்ட காலமாக மிகுந்த பக்தியுடன் சேவை செய்தார். இன்று அவர் பாபாவின் பாதங்களில் சரணடைந்துள்ளார். அவர் சிவலோகம் சென்றது காசிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.”

***



(Release ID: 2028907)

VL/PKV/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2028939) வருகையாளர் எண்ணிக்கை : 107