பிரதமர் அலுவலகம்
கஜக்ஸ்தான் அதிபர், பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார்
அதிபர் தொக்காயேவின் அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்
உத்தி சார்ந்த கூட்டாண்மையை அதிகரிக்க இருதலைவர்களும் தங்களின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தனர்
கஜக்ஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு வெற்றி பெற முழு ஆதரவைப் பிரதமர் தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
25 JUN 2024 6:07PM by PIB Chennai
கஜக்ஸ்தான் அதிபர் திரு காசிம் – ஜோமார்ட் தொக்காயேவ் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறையை வெற்றிகரமாக நடத்தி வரலாற்றுச் சிறப்புடன் தொடர்ந்து 3-வது முறையாக திரு மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு அதிபர் தொக்காயேவ் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதிபரின் அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். உத்தி சார்ந்த கூட்டாண்மையை அதிகரிப்பதிலும் இணைந்து பணியாற்றுவதை தொடர்வதிலும் இருதலைவர்களும் தங்களின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தனர்
ஆஸ்தானாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு வெற்றி பெற இந்தியாவின் முழு ஆதரவை வெளிப்படுத்திய பிரதமர், கஜக்ஸ்தானின் தலைமைத்துவம் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மகத்தான பங்களிப்பை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து தொடர்பில் இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்
***
SMB/KPG/RR/DL
(रिलीज़ आईडी: 2028601)
आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam