சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியா முழுவதும் உலக அரிவாள்செல் நோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது


17 மாநிலங்களில் 44,751 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

Posted On: 20 JUN 2024 3:50PM by PIB Chennai

அரிவாள் செல் நோய் பரவாமல் தடுக்கவும் இந்த நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக அரிவாள்செல் நோய் விழிப்புணர்வு தினத்தில் (19.06.2024) நாடு முழுவதும் ஏராளமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேசிய அரிவாள்செல் ரத்தசோகை கொதிப்பு இயக்கம் தொடங்கப்பட்ட பின் சென்ற ஆண்டு 3,39,77,877 பரிசோதனை ஆவணங்கள் இதற்கான இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் அரிவாள்செல் நிலை குறித்து 1,12,01,612 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரிவாள்செல் ரத்த சோகை நோய் அதிகம் உள்ள 17 மாநிலங்களில் 343 மாவட்டங்களில் 44,751 நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுகளின் போது 6,15,806 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 2,59,193 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

நேற்று தொடங்கிய விழிப்புணர்வு செயல்பாடுகள் அடுத்த 15 நாட்களுக்கு அதாவது ஜூலை 3 வரை தொடரும். இந்தக் காலகட்டத்தில் பத்து லட்சம் நபர்களை பரிசோதிக்கவும் 3 லட்சம் அடையாள அட்டைகள் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027018

***

AD/SMB/KPG/RR/DL



(Release ID: 2027134) Visitor Counter : 25