பிரதமர் அலுவலகம்

பீகாரில் நாளந்தாவின் இடிபாடுகளை பிரதமர் பார்வையிட்டார்

Posted On: 19 JUN 2024 1:39PM by PIB Chennai

பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று எச்சங்களாக திகழும் பண்டைக்கால இடிபாடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அசல் நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் முதல் குடியிருப்பு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாளந்தாவின் இடிபாடுகள் 2016-ம் ஆண்டில் ஐ.நா பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"நாளந்தாவின் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட எச்சங்களைப் பார்வையிட்டது அற்புதமாக இருந்தது. பண்டைய உலகின் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக திகழ்ந்ததற்கு சான்றாக இது  உள்ளது. இந்தத் தளம் ஒரு காலத்தில் இங்கு செழித்து வளர்ந்த அறிவார்ந்த கடந்த காலத்தைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறது. நாளந்தா ஒரு அறிவார்ந்த உணர்வை உருவாக்கியுள்ளது. அது நம் நாட்டில் தொடர்ந்து செழித்து வளர்கிறது.

***

(Release ID: 2026479)

PKV/AG/RR



(Release ID: 2026537) Visitor Counter : 53