தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஒரு விலங்கின் கவர்ச்சி திரைப்படத்தில் அதற்கான காலத்தை எடுத்துக்கொள்கிறது: வனவிலங்கு குறித்த திரைப்படத் தயாரிப்பாளர் அல்ஃபோன்ஸ் ராய்
Posted On:
18 JUN 2024 2:43PM by PIB Chennai
ஒரு விலங்கின் கவர்ச்சி திரைப்படத்தில் அதற்கான காலத்தை எடுத்துக்கொள்கிறது என்று வனவிலங்கு குறித்த புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் அல்ஃபோன்ஸ் ராய் தெரிவித்துள்ளார். 18-வது மும்பை திரைப்படவிழாவில் “வனப்பகுதியைக் கண்டறிதல்: இந்திய வனவிலங்குகள் குறித்த ஆவணப்படங்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள்” என்பது பற்றிய பேருரையை அவர் நிகழ்த்தினார்.
சென்னையில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான திரு அல்ஃபோன்ஸ் ராய், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பார்கள், பறவைகள் மற்றும் சிறிய வகை உயிரினங்களை விட, புலி, சிங்கம், திமிங்கலம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டார். இந்தத் துறையில் பணியாற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆர்வம் மிகவும் அவசியம என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் வளமாக இருப்பதால், வனவிலங்குகள் குறித்த திரைப்படத் தயாரிப்புக்கு இது மிகவும் சரியான இடம் என்று அவர் கூறினார்.
வனவிலங்குகள் பற்றிய திரைப்படத் தயாரிப்பின் போது, நெறிமுறைகள் மிகவும் அவசியம் என்று கூறிய திரு அல்ஃபோன்ஸ் ராய், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வனவிலங்குகளை படம் பிடிக்கலாம் என்றும், தங்களை காட்சிப்பதிவு செய்கிறார்கள் என்ற உணர்வு வனவிலங்குகளுக்கு ஏற்படாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும என்றும் கூறினார்.
இயற்கையில் மிகுந்த ஈடுபாடு கொள்ள மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ராய், பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம், சென்னை இயற்கை அறிவியல் சங்கம் போன்ற அமைப்புகளில் அவர்கள் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போது ஓடிடி தளங்கள் இருப்பதால், புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களை சார்ந்து இல்லாமல், வன விலங்குகளை முதன்மைப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக அவர கூறினார். முதல்முறையாக புலிகள் குறித்து படம் எடுத்தபோது தாம் எதிர்கொண்ட சவால்களை தனிப்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026108
***
SMB/RS/DL
(Release ID: 2026314)
Visitor Counter : 67