உள்துறை அமைச்சகம்

இந்திய திபெத் எல்லை காவல்படையின் மலைப்பகுதி மீட்புக் குழுவிற்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு

Posted On: 18 JUN 2024 1:32PM by PIB Chennai

லாகூல், ஸ்பிட்டி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட இந்திய திபெத் எல்லை காவல்படையின் மலைப்பகுதி மீட்புக் குழுவிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா  பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது:

“உயர்ந்த மலைப்பகுதியான லாகூல், ஸ்பிட்டி ஆகியவற்றில் இந்திய திபெத் எல்லை காவல்படையின் மலைப்பகுதி மீட்புக் குழு அண்மையில் மீட்புப் பணியை மேற்கொண்டு வானில் பறக்கும் விளையாட்டில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அமெரிக்கர் ஒருவரின் உடலை மீட்டதற்காக பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நிர்வாகம்  கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்களின்  உயிரையும் பொருட்படுத்தாது 14,800 அடி உயரமுள்ள மலையில் ஏறி உடலை மீட்டது மனிதாபிமான செயலாகும். இந்த அணியினரின்  மனிதாபிமானத்திற்கான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது”.

*****

SMB/RS/DL



(Release ID: 2026256) Visitor Counter : 24