சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக திரு ஜெகத் பிரகாஷ் நட்டா பொறுப்பேற்றுக்கொண்டார்

Posted On: 11 JUN 2024 3:12PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக திரு ஜெகத் பிரகாஷ் நட்டா இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தத் துறையின் இணையமைச்சர்களான திரு பிரதாப் ராவ் ஜாதவ், திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் உடனிருந்தனர்.

திரு ஜெ பி நட்டா 1975-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பிஜேபி இளைஞர் பிரிவின் தேர்தல் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். 

பின்னர் அவரது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றிபெற்றார். அம்மாநில கேபினெட் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் மற்றும் பிஜேபி நாடாளுமன்ற வாரியத்தின் உறுப்பினர் செயலாளராகவும் அவர பொறுப்பு வகித்தார். 2014  நவம்பர் முதல் 2019 மே வரை மத்திய சுகாதார அமைச்சர் பதவியில் இருந்தார்.

தற்போது சுகாதார அமைச்சக பொறுப்பேற்ற பின், நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் திரு நட்டாவிடம் எடுத்துரைத்தனர்.

முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா, கூடுதல் செயலாளர் திருமதி ரோலி சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் அமைச்சர் திரு நட்டாவை வரவேற்றனர்.

***

 

 

SMB/RS/DL



(Release ID: 2024314) Visitor Counter : 49