பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்

प्रविष्टि तिथि: 09 JUN 2024 11:55PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  திரு நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிரதமருக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இன்று மாலை பிரதமராக நான் பதவியேற்றுக் கொண்டேன். 140 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்வதையும், இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்”.

இன்று பதவி ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த அமைச்சரவைக் குழு இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டதாகும். அனைத்து மக்களின் வாழ்வாதாரம் மேம்பட நாங்கள் பணியாற்றுவோம்.

இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எங்களுடைய மதிப்புமிக்க கூட்டாளிகளுடன் இந்தியா என்றும் இணைந்து பணியாற்றும்”.

-------

SRI/IR/KPG/KV


(रिलीज़ आईडी: 2023720) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam