புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலாளர் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024-ல் உரையாற்றினார், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனில் இந்தியாவின் பார்வை மற்றும் திறன்களை எடுத்துரைத்தார்

Posted On: 16 MAY 2024 2:16PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர், திரு பூபிந்தர் சிங் பல்லா 2024, மே 15, அன்று நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடந்த உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024-ல் உரையாற்றினார் , புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் இந்தியாவின் உத்திசார்ந்த பார்வை மற்றும் திறன்களை அவர் எடுத்துரைத்தார்.

முன்னோடி திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகள் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற கூறுகளை உள்ளடக்கிய தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் விரிவான தன்மையை செயலாளர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "இந்த முழுமையான அணுகுமுறை ஹைட்ரஜன் மதிப்புத் தொடர் முழுவதும் புதிய கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றை அதிகிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நாட்டின் குறைந்த செலவை எடுத்துரைத்து, மலிவு விலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் நிலையை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைச் செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார். "போட்டி விலையுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு இந்தியா ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை வழங்குகிறது, இது நிலையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கி மாறுவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது."

பசுமை ஹைட்ரஜனின் முன்னணி ஏற்றுமதியாளராக உருவெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை செயலாளர் எடுத்துரைத்தார். இந்தியாவின் தெளிவான பார்வை மற்றும் நிலையான எரிசக்தி நடைமுறைகளுக்கான உறுதிப்பாட்டை வலியுறுத்திய அவர், உலகளாவிய ஹைட்ரஜன், பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

போதுமான சந்தை தேவை மற்றும் ஆதரவு இருந்தால், பசுமை ஹைட்ரஜனுக்கான எந்தவொரு உற்பத்தி தேவையையும் பூர்த்தி செய்வதற்கான இந்தியாவின் திறனை உலக ஹைட்ரஜன் உச்சி மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு செயலாளர் எடுத்துரைத்தார். இந்த நம்பிக்கை இந்தியாவின் வலுவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டு உத்தியிலிருந்து உருவாகிறது, இது அதன் தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2020773

***

ANU/AD/SMB/KPG/KV

 



(Release ID: 2020788) Visitor Counter : 60