தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் நடைபெற்ற 4-ம் கட்டத் தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு

Posted On: 13 MAY 2024 8:38PM by PIB Chennai

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய 2024 பொதுத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவில் 96 தொகுதிகளில் சுமார் 62.84% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த போதிலும், பல  வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

 

வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் அனைத்து கட்டங்களிலும் தேர்தல் செயல்முறையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்படும் இடங்களில் தேவையான வழிகாட்டுதல்களை வெளியிட்டார். வாக்காளர்கள் அச்சமோ மிரட்டலோ இன்றி வாக்களிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நான்காம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஸ்ரீநகரில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அமைதியாக வரிசையில் நின்று வாக்களித்தனர். தெலுங்கானாவின் 17 நாடாளுமன்றத் தொகுதிகளின் சில சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்க வாக்குப்பதிவு நேரத்தை (காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை) தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

 

வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் வகையில், ஆண்ட்ராய்டு பயனர்கள் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கும் வகையில் வாக்காளர் வாக்குப்பதிவு செயலி தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

வானிலை பெரும்பாலும் உகந்ததாக இருந்தது மற்றும் வெப்ப அலை போன்ற குறிப்பிடத்தக்க நிலைமைகள் இல்லை. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்குப்பதிவில் பங்கேற்றனர். 4 ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்த 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வானிலை நன்றாகவே காணப்பட்டது. ஆந்திரா, பீகார், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று நடந்த தேர்தலில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

 

அடுத்த கட்ட (கட்டம் 5) வாக்குப்பதிவு மே 20, 2024 அன்று 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது

***

Release ID: 2020477

SRI/KV/KR


(Release ID: 2020518) Visitor Counter : 145