பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேரள கடற்பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை மீட்ட இந்திய கடலோரக் காவல்படை

Posted On: 08 MAY 2024 11:37AM by PIB Chennai

இந்திய கடலோர காவல்படை (ஐஜிசி) நேற்று கேரளாவின் பேப்பூர் அருகே சுமார் 40 கடல் மைல் தொலைவில் இருந்த ஜசீரா என்ற பெயர் கொண்ட இந்திய மீன்பிடி படகில், மோசமாக நோய்வாய்ப்பட்ட மீனவரை மீட்டது. அந்த மீனவர் கடலில் தவறி விழுந்து முழ்கும் நிலைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீன்பிடி படகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டார். எனினும் நுரையீரலில் அதிகப்படியான நீர் சேர்ந்ததன் காரணமாக அந்த மீனவரது  உடல்நிலை மோசமடைந்தது.

 

இதனையடுத்து மீன்பிடி படகு, ஒரு மருத்துவ ரீதியிலான அவசர அழைப்பை விடுத்தது. அந்தச் சூழலில் இந்தியக் கடலோர காவல் படை விரைந்து செயல்பட்டு, தனது மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை கொச்சியில் இருந்து ஒரு மருத்துவக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஆர்யமான் & சி -404 கப்பல்களும் அந்த இடத்திற்கு விரைந்தன. ஐ.சி.ஜி ஊழியர்கள், மீன்பிடி படகை கடலில் கண்டறிந்தன. படகிலிருந்து நோயாளி மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

இந்திய கடலோரக் காவல்படையின் விரைவான மற்றும் உடனடி ஒருங்கிணைப்பு 'வயம் ரக்ஷமா' என்ற அதன் குறிக்கோளுக்கு ஏற்ப கடலில் மற்றொரு உயிரைக் காப்பாற்றியுள்ளது.

 

***



(Release ID: 2019914)

PKV/RR/KR


(Release ID: 2019928) Visitor Counter : 69