தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகளும், அதன் பிரதிநிதிகளும் சமூக ஊடகங்களை பொறுப்புடனும், நெறிமுறையுடனும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Posted On: 06 MAY 2024 6:47PM by PIB Chennai

அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகளின் நடத்தை நெறிமுறைகள் விதி மீறலைக் கவனத்தில் கொண்டு, தேர்தல் பிரச்சாரத்தில் சமூக ஊடகங்களை பொறுப்புடனும், நெறிமுறையுடனும் பயன்படுத்துமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று அறிவுறுத்தியுள்ளது.

இணைப்பில் காண்க: https://www.eci.gov.in/eci- முறையற்ற தகவல்கள் அல்லது தவறான தகவல்களை பரப்பும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஆணையம் கட்சிகளை எச்சரித்துள்ளது. தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. போலிகளைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்வதற்கு எதிராக ஒழுங்குமுறை கட்டமைப்பை நிர்வகிக்கும் தற்போதைய சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தற்போதுள்ள சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, போலி ஆடியோ / வீடியோக்களை வெளியிடுவதையும் பரப்புவதையும் தவிர்க்கவும், அப்பட்டமான பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் எந்தவொரு தகவல்களையும் பெண்களுக்கு எதிராக இழிவான உள்ளடக்கத்தை உள்ளீடு செய்வதையும் தவிர்க்கவும், பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், வன்முறை அல்லது விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்கவும் கட்சிகளுக்கு குறிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற எந்தவொரு உள்ளடக்கத்தையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த மூன்று மணி நேரத்திற்குள் உடனடியாக அகற்றவும், தங்கள் கட்சியில் பொறுப்பான நபரை எச்சரிக்கவும், சட்டவிரோத தகவல்கள் மற்றும் போலி பயனர் கணக்குகளை அந்தந்த தளங்களுக்கு புகாரளிக்கவும், தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) சட்ட விதி 3 ஏ-ன் கீழ் குறைதீர்ப்பு மேல்முறையீட்டுக் குழுவுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

******

ANU/AD/IR/KPG/DL



(Release ID: 2019776) Visitor Counter : 44