தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் தீவிர அக்கறையின் பலனாக வாக்களிக்க ஆர்வம் காட்டிய பழங்குடியின சமூதாயத்தினர்

Posted On: 01 MAY 2024 2:46PM by PIB Chennai

கடந்த இரண்டு ஆண்டுகளாக, தேர்தல் செயல்பாட்டில் குறிப்பாக பாதிப்புக்குள்ளாகக்கூடிய பழங்குடியின குழுக்கள், சமூகங்கள் மற்றும் பிற பழங்குடியின குழுக்களை சேர்ப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் பலனளிக்க தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள பழங்குடியின குழுக்கள் பொதுத் தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களில் உற்சாகமாக பங்கேற்றுள்ளன.

ஒரு வரலாற்று நகர்வாக, கிரேட் நிக்கோபாரின் ஷோம்பென் பழங்குடியினர் முதல் முறையாக பொதுத் தேர்தலில் வாக்களித்தனர்.

பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழுக்கள், தேர்தல் நடைமுறையில் சேர்க்கப்படுவதை இந்திய தேர்தல் ஆணையம் உணர்ந்திருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்படுவதற்கும், வாக்களிப்பு செயல்முறையில் பங்கேற்பதற்கும் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டது. வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்தத்தின் போது, வாக்காளர் பட்டியலில் சேர்க்க பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் குறிப்பிட்ட மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 2022, நவம்பர்  மாதம்  புனேயில்  நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தேசிய அளவிலான சிறப்பு சுருக்க திருத்தம் தொடக்க விழாவில், தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், பழங்குடியினரை நாட்டின் பெருமைமிக்க வாக்காளர்களாக பதிவு செய்வதற்கும், அதிகாரம் அளிப்பதற்கும் ஆணையம் கவனம் செலுத்தும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, திரிபுரா, ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினரை தேர்தல் நடைமுறைகளில் ஈடுபடுத்த செய்வது தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

தமிழ்நாட்டில் குட்டுநாயக்கன், கோட்டா, குரும்பா, இருளர், பனியன், தோடா ஆகிய 6 மக்கள் உரிமை கோரும் குழுக்கள் 2,26,300 மக்கள் தொகை கொண்டது. இதில் 1,62,049 பேர் 18 வயது பூர்த்தியான தகுதி வாய்ந்த வாக்காளர்களாக கண்டறியப்பட்டனர். இதில்  1,61,932 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள். கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பத்தூர் போன்ற மண்டலங்களில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி, 23 மாவட்டங்களில் ஒரு விரிவான பிரச்சாரம் வாக்காளர்கள்  சேர்க்கைக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

ஆர்வமுள்ள வாக்காளர்கள் அடர்ந்த காடுகள், நீர்வழிகள் வழியாக நடந்து செல்வது போன்ற பல்வேறு வழிகளில் வாக்குச்சாவடியை அடைந்து மக்களவைத் தேர்தலில் தங்கள் பங்கேற்பை உறுதி செய்தனர்.

பின்னணி

இந்தியாவில் 8.6% பழங்குடியின மக்கள் உள்ளனர். இதில் 75 பழங்குடியின குழுக்கள் உள்ளன. அவை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்கள் ஆகும். முன்னர் அணுக முடியாத பகுதிகளில் புதிய வாக்குச் சாவடிகள் அமைந்திருப்பது பழங்குடியினரை பெரிய அளவில் சேர்க்க வழிவகுத்தது. கடந்த 11 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில், கமார், புஞ்சியா, பைகா, பஹாடி கோர்வா, அபுஜ்மதியா, பிர்ஹோர், சஹாரியா, பாரியா, செஞ்சு, கோலம், தோட்டி, கொண்டரெட்டி, ஜெனு குருபா மற்றும் கோரகா ஆகிய 14 பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 9 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். ஆணையத்தின் சிறப்பு முயற்சிகள் அந்த மாநிலங்களில் 100% பழங்குடியினர் சேர்க்கையை உறுதி செய்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019294

***

PKV/RS/RR



(Release ID: 2019308) Visitor Counter : 76