பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

600 கோடி ரூபாய் மதிப்பிலான 86 கிலோ போதைப் பொருட்களை இந்தியக் கடலோரக் காவல்படை கைப்பற்றி, பாகிஸ்தான் கப்பலின் 14 பணியாளர்களைக் கைது செய்தது

Posted On: 28 APR 2024 9:09PM by PIB Chennai

பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) ஆகியவற்றுடன் இணைந்து, இந்தியக் கடலோரக் காவல்படை  ரூ. 600 கோடி மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது. ஏப்ரல் 28, 2024 அன்று கடலில் நிகழ்த்தப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் கப்பலில் இருந்து 14 குழு உறுப்பினர்களை கைது செய்தது.

ஏ.டி.எஸ் மற்றும் என்.சி.பி அதிகாரிகளைக் கொண்ட இந்தியக் கடலோரக் காவல்படை கப்பலான ராஜ்ரத்தனின் கண்காணிப்பில் இருந்து  தப்ப முயன்ற போதும், சந்தேகத்திற்குரிய படகு  அடையாளம் காணப்பட்டது. சந்தேகத்திற்கிடமான படகில் ஏறிய கப்பலின் சிறப்புக் குழு, முழுமையான சோதனைகளுக்குப் பிறகு, கணிசமான அளவு போதைப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்தியது. கூடுதல் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக குழுவினரும், கப்பலும் தற்போது போர்பந்தருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்று 11 சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு  வழிவகுத்த இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஏ.டி.எஸ் ஆகியவற்றின் கூட்டு  நோக்கங்களுக்கான ஒருங்கிணைப்பை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

***

(Release ID: 2019051)

AD/BR/RR


(Release ID: 2019053) Visitor Counter : 76