குடியரசுத் தலைவர் செயலகம்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
20 APR 2024 7:52PM by PIB Chennai
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக சமண சமூகத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாவீர் ஜெயந்தி "அகிம்சை மற்றும் இரக்கத்தின்" வடிவமான பகவான் மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இந்த பண்டிகை நமக்கு அன்பு மற்றும் அமைதியின் செய்தியை வழங்குகிறது. இலட்சிய மற்றும் நாகரிக சமுதாயத்தை உருவாக்க அகிம்சை, பிரம்மச்சரியம், உண்மை மற்றும் துறவு ஆகியவற்றின் பாதையை மகாவீரர் காட்டினார். அவரது போதனைகள் எப்போதும் மனித குலத்தின் நலனுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
இந்த நன்னாளில், சமூகத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்பவும், நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
குடியரசுத்தலைவரின் செய்தியை இந்த இணைப்பில் காணலாம்
***
AD/PKV/DL
(रिलीज़ आईडी: 2018352)
आगंतुक पटल : 186