தேர்தல் ஆணையம்

முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்தனர்


மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி கணிசமான வாக்குப்பதிவு; பொதுத் தேர்தலின் முதல் கட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்கள் பண்டிகை உணர்வைத் தழுவிக் கொண்டனர்

Posted On: 19 APR 2024 6:59PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்  இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதுஇந்தியாவின் பரந்த நிலப்பரப்பு இன்று , கோடை வெயில் வண்ணங்களாலும், வாக்குச் சாவடிகளின் கொண்டாட்டங்களாலும் பிரகாசித்தது. உத்தம்பூர், ஜம்மு காஷ்மீர் போன்ற சில பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல்மக்கள் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கும், 92 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கணிசமான வாக்குகள் பதிவாகியுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளதுஇன்று காலை 7 மணிக்கு 102 தொகுதிகளில்  ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியபோது வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் வாய்ப்புக்காக காத்திருந்த காட்சிகள் வாக்குச்சாவடிகளில் காணப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார் மற்றும் திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுமையாகவும் செம்மையாகவும் செய்யப்பட்டிருந்தன.

துடிப்பான இளைஞர்கள் முதல் புத்திசாலித்தனமான பெரியவர்கள், தம்பதிகள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகள் வரை அனைத்து வயது வாக்காளர்களும் தேர்தல் விழாக்களில் பங்கேற்றனர்.

வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாகவும், ஒழுங்காகவும் நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை இந்திய கலாச்சாரத்தின் துடிப்பான இடங்களாக  மாற்றியதைக் காண முடிந்தது.

விரல் நுனியில் அழியாத மை பொறிக்கப்பட வேண்டும் என்ற மனவுறுதி, தீர்மானம் ஆகியவற்றின் மனதைத் தொடும் கதைகள் வெளிவருகின்றன. அருணாச்சல பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்தில், ஒரு வயதான வாக்காளர் வீட்டிலிருந்து வாக்களிக்க விருப்பம் இருந்தபோதிலும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க விரும்பினார்.

மற்றொரு இடத்தில், மத்தியப் பிரதேசத்தின் திண்டோரியில் பாரம்பரிய உடையில் அலங்கரிக்கப்பட்ட முதல் முறையாக வாக்களிக்கும் திருமதி தேவகி, வாக்களித்த பிறகு தனது மை வைத்த விரலால் பெருமையுடன் போஸ் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கொண்டாட்ட சூழ்நிலையை சேர்க்கும் வகையில், புதிதாக திருமணமான வாக்காளர்களும் பெருமையுடன் சமூக ஊடகங்களில் தங்கள் மை குறிக்கப்பட்ட விரல்களால் செல்ஃபி இடுகையிட அழைத்துச் சென்றனர்.

நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் வந்ததால், உள்ளடங்கிய தேர்தல்களை உறுதி செய்வதற்கான முயற்சிகள் இன்று வாக்குச் சாவடிகளில் இருந்து காட்சிகள் காணப்பட்டன. தெற்கு அந்தமானில் உள்ள ஸ்ட்ரெய்ட் தீவைச் சேர்ந்த கிரேட் அந்தமான் பழங்குடியினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

வாக்களிப்பதை ஒரு இனிமையான மற்றும் மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுவதற்கு ஆணையம் குறிப்பாக முக்கியத்துவம் அளித்துள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொரு வாக்காளரும் எளிதாக வாக்களிக்க குடிநீர், கொட்டகை, கழிப்பறைகள், சாய்வுதளம், தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் மின்சாரம் போன்ற குறைந்தபட்ச வசதிகள் உள்ளன. சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாத பகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பகல் ஒரு மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 39.43 சதவீதமும், புதுச்சேரியில் 44.95 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.

***

ANU/SRI/PKV/KV

 

 



(Release ID: 2018304) Visitor Counter : 80