பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
31 JAN 2023 11:35AM by PIB Chennai
வணக்கம் நண்பர்களே,
2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. ஆரம்பத்திலிருந்தே, நிதி உலகின் ஜாம்பவான்கள், அவர்களின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை, அனைத்து திசைகளிலிருந்தும் நேர்மறையான செய்திகளை சமிக்ஞை செய்து நம்பிக்கை மற்றும் புதிய உற்சாகத்தின் கதிர்களைக் கொண்டு வருகின்றன. இன்று மிக முக்கியமான நாள். தற்போதைய குடியரசுத் தலைவர் முதல் முறையாக நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். குடியரசுத் தலைவரின் உரை இந்திய அரசியலமைப்பின் மாண்பையும், நாடாளுமன்ற நடைமுறைகளின் பெருமையையும் குறிக்கிறது. குறிப்பாக, இன்றைய தினம் பெண் சக்திக்கும், தொலைதூரக் காடுகளில் வாழும் நமது நாட்டின் மகத்தான பழங்குடி பாரம்பரியத்திற்கும் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். இன்றைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு மகத்தான தருணம், ஏனெனில் தற்போதைய இந்தியாவின் குடியரசுத்தலைவர் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். எமது நாடாளுமன்ற நடவடிக்கைகளில், கடந்த ஆறு-ஏழு தசாப்தங்களாக வளர்ந்துள்ள பாரம்பரியம், ஒரு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் முதல் முறையாக பேசும்போது, முழு சபையும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மரியாதை செலுத்துகிறது என்பதை அவதானிக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சபையில் உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இது ஒரு அற்புதமான மற்றும் சிறந்த பாரம்பரியம். இன்று குடியரசுத் தலைவர் தமது தொடக்க உரையையும் நிகழ்த்துகிறார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இந்த தருணத்தை கொண்டாடுவது நமது பொறுப்பாகும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்களும் இந்த தரத்தை பூர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். நம் நாட்டின் நிதியமைச்சரும் ஒரு பெண்தான். நாளை அவர் நாட்டு மக்களுக்கு மற்றொரு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், இந்திய பட்ஜெட்டை இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கண்காணிக்கிறது. நிலையற்ற உலகப் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பட்ஜெட் இந்தியாவின் சாதாரண மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளும். இந்த விருப்பங்களை நிறைவேற்ற நிதியமைச்சர் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஒரே குறிக்கோள் மட்டுமே உள்ளது, நமது பணி கலாச்சாரத்தின் மையப்புள்ளி 'இந்தியா முதலில், குடிமகன் முதலில்' என்பதாகும். இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்லும்போது, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த பிரச்சினைகள் அனைத்தையும் விவாதிக்கும், மேலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நமது நண்பர்கள் முழுமையாக தயாராக வந்து பாடங்களை நுணுக்கமாக ஆராய்ந்த பின்னர் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். கொள்கை முடிவுகளுக்காக அவையில் நடைபெறும் இந்த விவாதங்கள், நாட்டுக்கு பலனளிக்கும் அமிர்தத்தை உருவாக்கும். உங்கள் அனைவரையும் மீண்டும் வரவேற்கிறேன்!
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி.
***
(Release ID: 1894864)
PKV/AG/RR
(Release ID: 2018004)
Visitor Counter : 71
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam