தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளிலும், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் 92 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2024 ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது

Posted On: 12 APR 2024 5:50PM by PIB Chennai

21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளிலும், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் 92 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2024 ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் நியாமாகவும் சுமுகமாவும் நடைபெற தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.  

21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் 127 பொதுப் பார்வையாளர்கள், 67 காவல்துறைப் பார்வையாளர்கள் மற்றும் 167 செலவின பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர் திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் வாக்காளர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மத்திய பார்வையாளர்கள் கீழ்க்கண்ட அம்சங்களை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

  • முன்கூட்டியே அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான தயார்நிலை இருப்பதை உறுதி செய்தல்
  • பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தல்
  • 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான சுமூகமான செயல்முறை
  • அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்படுவது
  • மாவட்ட நிர்வாகத்தால் செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ப போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்துதல்
  • அனைத்து வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் / ஒப்புகைச் சீட்டுக் கருவிகளை வழங்குதல்
  • அனைத்து புகார்களுக்கும் தீர்வு ஏற்படுத்துவதை உறுதி செய்தல்
  • வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக 100 சதவீத வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகிக்கப்படுதல்
  • வாக்கு எண்ணும் பணியாளர்கள், நுண் பார்வையாளர்கள் உட்பட அனைத்து வாக்குச்சாவடி பணியாளர்களுக்கும் பயிற்சி
  • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்தல்
  • போலி செய்திகள் / தவறான தகவல்களை கட்டுப்படுத்துதல்

இந்த அம்சங்களை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-----

ANU/AD/PLM/DL


(Release ID: 2017785) Visitor Counter : 112