குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சைத்ர சுக்லாடி, உகாதி, குடி பட்வா, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா பண்டிகைகளையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 08 APR 2024 4:31PM by PIB Chennai

சைத்ர சுக்லாடி, உகாதி, குடி பட்வா, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா பண்டிகைகளையொட்டி  நாட்டு மக்களுக்குக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தப் புனிதமான பண்டிகைகளின் நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குடியரசுத் தலைவர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழாக்கள் புத்தாண்டையும், வசந்த காலத்தையும் வரவேற்பதற்காக நடத்தப்படுகின்றன. அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை என்ற செய்திகளை பரவலாக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவை நமது வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளங்களாகும். இந்த விழாக்களின் போது,  இயற்கைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த விழாக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டுவரட்டும். மகத்தான உற்சாகத்தோடு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற ஊக்கம் அளிக்கட்டும்.

***

AD/SM/RS/RR/DL


(रिलीज़ आईडी: 2017442) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada