தேர்தல் ஆணையம்

2024 பொதுத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவுக்காக இளம் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடகங்களின் வலிமையைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது

Posted On: 07 APR 2024 7:54PM by PIB Chennai

2024 மக்களவைத் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) சமூக ஊடக தளங்களில் 'டர்னிங் 18' மற்றும் 'யூ ஆர் தி ஒன்' போன்ற தனித்துவமான பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்களை தேர்தலில் வாக்களிப்பதில் ஈடுபடுத்துவதற்கான ஒரு புதுமையான பயணத்தை ஆணையம் தொடங்கியுள்ளது.தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட முக்கிய தளங்களில் தேர்தல் ஆணையம் சமூக ஊடக செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

டர்னிங் 18 பிரச்சாரம்

18-வது மக்களவைத் தேர்தலில் 18 வயதை எட்டிய தகுதியான வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க

'டர்னிங் 18' பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. வாக்களிப்பதில் நகர்ப்புற வாக்காளர்களிடையே அதிகம் நிலவும் அக்கறையின்மையை களையும் வகையிலும் இந்தப் பிரச்சாரம் அமைந்துள்ளது. இதில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க பல்வேறு கருப்பொருள்கள் மற்றும் உத்திகள் பயன்படுத்தப்படுகிறது.

நீங்களும் ஒருவர் (யூ ஆர் தி ஒன்) பிரச்சாரம்

தேர்தல் ஆணையம் 'யூ ஆர் தி ஒன்' என்ற தலைப்பில் மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. தேர்தல் நடைமுறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பி.எல்.ஓ.), கள ஊழியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஊடகத் துறையினர், மத்திய படைகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் வரை, தேர்தல் நடைமுறையில் பணியாற்றும் ஒவ்வொரு நபரும் தேர்தல் செயல்முறையின் நேர்மை மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களது பணிகளை இந்தப் பிரச்சாரம் அங்கீகரிக்கிறது.

***

SM/PLM/DL



(Release ID: 2017441) Visitor Counter : 88