தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

திரு ஞானேஷ் குமார் மற்றும் திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்றனர்

प्रविष्टि तिथि: 15 MAR 2024 1:53PM by PIB Chennai

திரு ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், நிர்வாச்சன் சதனில் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்களை வரவேற்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் அவர்கள் இருவரும் இணைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு 2024 மார்ச் 14 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. திரு ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் 1988 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்த அதிகாரிகள் ஆவர், அவர்கள் முறையே கேரளா மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் கேடரைச் சேர்ந்தவர்கள்.

***

PKV/BS/AG/KV


(रिलीज़ आईडी: 2014917) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Telugu , Kannada