பிரதமர் அலுவலகம்
ஒற்றுமைச் சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்டது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
02 MAR 2024 2:22PM by PIB Chennai
ஒற்றுமைச் சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்ட அனுபவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகை தர வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஒற்றுமைச் சிலையை பார்வையிட்ட பிறகு திரு பில் கேட்ஸ் தமது ஒரு எக்ஸ் பதிவில், ஒற்றுமைச் சிலை ஒரு பொறியியல் அற்புதம் என்றும், சர்தார் படேலுக்கு நாம் செலுத்தும் மகத்தான மரியாதை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பில் கேட்ஸின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் திரு மோடி கூறியிருப்பதாவது:
"இதைப் பார்த்து மகிழ்ச்சி! 'ஒற்றுமைச் சிலை'யில் உங்கள் அனுபவத்தை நீங்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலங்களில் உலகெங்கிலும் உள்ள மக்கள் இதைப் பார்வையிட வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். @BillGates"
***
(Release ID: 2011014)
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2011833)
आगंतुक पटल : 83
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam