பிரதமர் அலுவலகம்

'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார்

சாலைகள், ரயில்வே, நிலக்கரி, மின்சாரம் மற்றும் சூரிய சக்தி போன்ற முக்கிய துறைகளின் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

என்டிபிசியின் லாரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் அலகு-1-ஐ நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், என்டிபிசியின் லாரா சூப்பர் அனல் மின் திட்ட அலகு-2க்கும் அடிக்கல் நாட்டினார்

"சத்தீஸ்கரின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனே இரட்டை என்ஜின் அரசின் முன்னுரிமை"

"ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் வளர்ச்சியைந்த சத்தீஸ்கர் கட்டமைக்கப்படும்"

"நுகர்வோரின் மின்சார கட்டணத்தை முற்றிலும் குறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது"

"மோடியைப் பொறுத்தவரை, நீங்கள் அவரது குடும்பம், உங்கள் கனவுகள் அவரது தீர்மானங்கள்"

"அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் போது, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டும்"

"ஊழல் முடிவுக்க

Posted On: 24 FEB 2024 1:30PM by PIB Chennai

"வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர்" நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ரூ .34,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான சாலைகள், ரயில்வே, நிலக்கரி, மின்சாரம் மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சத்தீஸ்கரின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்து வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர் உருவாக்கப்படும் என்றும், நவீன உள்கட்டமைப்பு சத்தீஸ்கர் வளர்ச்சியடைந்த திட்டத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் அல்லது அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் சத்தீஸ்கர் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

தேசிய அனல் மின் கழகத்தின் சூப்பர் அனல் மின் திட்டத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்ததையும், 1600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும் குறிப்பிட்ட பிரதமர், தற்போது குறைந்த செலவில் மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றார்.

சத்தீஸ்கரை சூரிய மின்சக்திக்கான மையமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் ராஜ்நந்த்கான் மற்றும் பிலாயில் உள்ள சூரிய மின் நிலையங்களை அர்ப்பணிப்பதையும் குறிப்பிட்டார். அவை இரவில் கூட அருகிலுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டவை.

"நுகர்வோரின் மின்சாரக் கட்டணங்களை பூஜ்ஜியமாகக் குறைக்க அரசு முயற்சிக்கிறது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். தற்போது நாடு முழுவதும் 1 கோடி வீடுகளை உள்ளடக்கிய பிரதமரின் சூரிய சக்தி வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்து தெரிவித்தார்.

மேற்கூரை சூரிய ஒளித் தகடுகள் அமைப்பதற்கான நிதி உதவியை அரசு நேரடியாக வங்கிக் கணக்குகளில் வழங்கும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அரசு திரும்ப வாங்கும் என்றும், இதன் மூலம் மக்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் கூடுதல் வருமானத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தரிசு விவசாய நிலங்களில் சிறிய அளவிலான சூரிய சக்தி ஆலைகளை அமைக்க விவசாயிகளுக்கு உதவுவதன் மூலம் விவசாயிகளை சக்தி அளிப்பவர்களாக மாற்றுவதற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

சத்தீஸ்கரில் இரட்டை என்ஜின் அரசு அளித்த உத்தரவாதங்களை பிரதமர் பாராட்டினார். மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த போனஸைப் பெற்றுள்ளனர். டெண்டு லீவ் கலெக்டர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான தேர்தல் உத்தரவாதத்தையும் இரட்டை என்ஜின் அரசு நிறைவேற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிரதமரின் குடியிருப்பு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழியே குடிநீர் போன்ற திட்டங்கள் புதிய வேகத்தை எடுத்துள்ளன என்று அவர் கூறினார். பல்வேறு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மெஹ்தானி வந்தன் யோஜனா திட்டத்துக்காக மாநிலத்தின் பெண்களை பிரதமர் பாராட்டினார்.

சத்தீஸ்கரில் கடின உழைப்பாளிகளான விவசாயிகள், திறமையான இளைஞர்கள் ஆகியோருடன் இயற்கை பொக்கிஷங்கள் உள்ளன, வளர்ச்சிடைவதற்கு தேவையான அனைத்தும் உள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.

முந்தைய அரசுகளின் கிட்டப்பார்வை மற்றும் சுயநல வாரிசு அரசியல், ஆகியவற்றால் மாநிலத்தில் முன்னேற்றம் இல்லை என்று அவர் விமர்சித்தார். மோடியைப் பொறுத்தவரை, நீங்கள் அவரது குடும்பம், உங்கள் கனவுகள் அவரது தீர்மானங்கள். அதனால்தான் நான் இன்று வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர் பற்றி பேசுகிறேன்.

"140 கோடி இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த சேவகர் தனது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்" என்று கூறிய அவர், உலகில் இந்தியாவின் தோற்றம் குறித்து ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைப்பதாக 2014 ஆம் ஆண்டு அவர் அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்தார்.

அதேபோல், ஏழை குடிமக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் ஏழைகளின் நலனுக்காக இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்றார். இலவச ரேஷன், இலவச மருத்துவ சிகிச்சை, குறைந்த விலையில் மருந்துகள், வீட்டு வசதி, குழாய் குடிநீர், எரிவாயு இணைப்பு, ஏழைகளுக்கு கழிப்பறைகள் ஆகியவை குறித்து அவர் குறிப்பிட்டார். நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் மோடியின் உத்தரவாத வாகனம் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றது.

10 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்த பிரதமர், நமது முன்னோர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களின்படியான இந்தியாவை உருவாக்குவது பற்றி குறிப்பிட்டு, அத்தகைய வளர்ந்த இந்தியா இன்று உருவாகி வருகிறது என்று கூறினார்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை பற்றிக் குறிப்பிட்ட அவர், நிகழ்நேரத்தில் பணப் பட்டுவாடா, வங்கி முறைகள், பெறப்பட்ட பணப் பட்டுவாடா குறித்த அறிவிப்புகள் ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துரைத்து, அது இன்று நனவாகியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசு நேரடி பலன் பரிமாற்றம், முத்ரா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்காக இளைஞர்களுக்கு ரூ .28 லட்சம் கோடி உதவி மற்றும் பிரதமர் விவசாயிகள் கௌரவ நிதியின் கீழ் ரூ .2.75 லட்சம் கோடி உதவி ஆகியவற்றின் மூலம் நாட்டு மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ .34 லட்சம் கோடிக்கு மேல் மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை இல்லாததால் முந்தைய அரசுகளில் ஏற்பட்ட நிதி பரிமாற்றத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். "ஊழல் முடிவுக்கு வரும்போது, வளர்ச்சி தொடங்குகிறது மற்றும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது" என்று பிரதமர் மோடி கூறினார், நல்ல நிர்வாகத்தின் விளைவாக சுகாதார வசதிகள் மற்றும் கல்வி உள்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் புதிய சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை நிர்மாணிப்பது குறித்து அவர் எடுத்துக் கூறினார்.

இதுபோன்ற பணிகள் சத்தீஸ்கரில் வளர்ச்சியடைந்த சமூகத்தை உருவாக்கும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் போது, சத்தீஸ்கரும் வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டும் என்றும் பிரதமர் கூறினார்.

"இது ஒரு பெரிய வாய்ப்பு, குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களுக்கு. சத்தீஸ்கர் வளர்ச்சி அவர்களின் கனவுகளை நனவாக்கும்" என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

என்டிபிசி-யின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம், அலகு-1ஐ (2x800 மெகாவாட்) நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் என்டிபிசியின் லாரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் alagu-2க்கு (2x800 மெகாவாட்) அடிக்கல் நாட்டினார்.

நிலையத்தின் அலகு-1 சுமார் ரூ .15,800 கோடி முதலீட்டில் கட்டப்பட்டாலும், திட்டத்தின் அலகு -2 ,  அலகு-1 வளாகத்தில் கிடைக்கக்கூடிய நிலத்தில் கட்டப்படும், இதனால் விரிவாக்கத்திற்கு கூடுதல் நிலம் தேவையில்லை. மேலும் ரூ .15,530 கோடி முதலீடு தேவைப்படும்.

நிலை ஒன்று மிகவும் திறன்மிக்க சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்திலும், நிலை இரண்டு அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. எனவே இந்தத் திட்டம், குறைந்த அளவு குறிப்பிட்ட நிலக்கரி பயன்பாடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை உறுதி செய்யும்.

நிலை -1 மற்றும் 2 இரண்டிலிருந்தும் 50% மின்சாரம் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் அதே வேளையில், இந்த திட்டம்  குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, டாமன் & டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி போன்ற பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மின் நிலைமையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.

தென்மேற்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் ரூ.600 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட மூன்று முக்கிய இணைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இவை விரைவாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இயந்திரங்கள் மூலமாகவும் நிலக்கரியை வெளிக்கொணர உதவும்.

இந்த திட்டங்களில் எஸ்.இ.சி.எல் இன் டிப்கா பகுதி மற்றும் சாலில் உள்ள டிப்கா ஓ.சி.பி நிலக்கரி கையாளுதல் ஆலை மற்றும் எஸ்.இ.சி.எல் இன் ராய்கர் பகுதியில் உள்ள பரூட் ஓ.சி.பி நிலக்கரி கையாளுதல் ஆலை ஆகியவை அடங்கும்.

நிலக்கரி குழிகள், பூமிக்கு அடியில் உள்ள குழிகள் மற்றும் கன்வேயர் பெல்ட்கள் மூலம் விரைவான ஏற்றுதல் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட நிலக்கரி கையாளும் ஆலைகளுக்கு நிலக்கரியை இயந்திரமயமாக்கப்பட்ட போக்குவரத்தை எஃப்எம்சி திட்டங்கள் உறுதி செய்கின்றன.

சாலை வழியாக நிலக்கரி போக்குவரத்தைக் குறைப்பதன் மூலம், இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துக்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கங்களைக் குறைப்பதன் மூலம் நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றி வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை எளிதாக்க உதவும்.

சுரங்கத்தின் மேற்புறத்தில் இருந்து ரயில்வே சைடிங்குகளுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்லும் லாரிகளின் டீசல் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் போக்குவரத்து செலவுகளை சேமிப்பதற்கும் இது வழிவகுக்கிறது.  

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையாக, ராஜ்நந்த்கானில் சுமார் 900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சூரிய ஒளி பிவி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் ஆண்டுதோறும் 243.53 மில்லியன் யூனிட் மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் மற்றும் 25 ஆண்டுகளில் சுமார் 4.87 மில்லியன் டன் சிஓ2 உமிழ்வைக் குறைக்கும், இது அதே காலகட்டத்தில் சுமார் 8.86 மில்லியன் மரங்களால் தனிமைப்படுத்தப்பட்ட கார்பனுக்கு சமமாகும்.

ரயில் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ.300 கோடி செலவில் கட்டப்படவுள்ள பிலாஸ்பூர் – உஸ்லாப்பூர் மேம்பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மற்றும் கட்னி நோக்கிச் செல்லும் பிலாஸ்பூரில் நிலக்கரி போக்குவரத்து  இயக்கமும் தொடங்கப்பட்டது. பிலாயில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது ரயில்களை இயக்குவதில் சூரிய சக்தியைப் பயன்படுத்த உதவும்.

தேசிய நெடுஞ்சாலை 49-ல் 55.65 கிலோமீட்டர் நீளமுள்ள பிரிவை புனரமைத்து, இருவழிச் சாலைகளாக தரம் உயர்த்துவதை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிலாஸ்பூர் மற்றும் ராய்கர் ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும். தேசிய நெடுஞ்சாலை 130-ல் 52.40 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியை புனரமைத்து, இருவழிப்பாதையாக மேம்படுத்துவதையும் பிரதமர் அர்ப்பணித்தார். இந்தத் திட்டம் அம்பிகாபூர் நகரத்தை ராய்ப்பூர் மற்றும் கோர்பா நகரங்களுடன் இணைப்பதை மேம்படுத்துவதுடன், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

*******

 

AD/BS/DL



(Release ID: 2008606) Visitor Counter : 92