பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்


"ஸ்ரீ கல்கி கோயில் இந்திய ஆன்மீகத்தின் புதிய மையமாக உருவாகும்"

"இன்றைய இந்தியா ‘பாரம்பரியத்துடன் கூடிய வளர்ச்சி' என்ற மந்திரத்துடன் விரைவாக முன்னேறுகிறது”

"இந்திய கலாச்சார மறுமலர்ச்சி, நமது அடையாளத்தின் பெருமை, அதை நிறுவுவதற்கான நம்பிக்கை ஆகியவற்றில் உத்வேகம் அளிப்பதில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் பின்னணியாகத் திகழ்கிறார்"

" குழந்தை ராமர் இருப்பின் தெய்வீக அனுபவம், அந்த தெய்வீக உணர்வு, இன்னும் நம்மை உணர்ச்சிவசப்படுத்துகிறது"

"கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது இப்போது நிஜமாகிவிட்டது"

"தற்போது, ஒருபுறம் நமது புனித யாத்திரை மையங்கள் உருவாக்கப்படுகின்றன, மறுபுறம் நகரங்களில் உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பும் உருவாக்கப்பட்டு வருகின்றன"

"கல்கி, கால சக்கரத்தில் மாற்றத்தைத் தொடங்கியவராகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறார்"

"தோல்வியிலிருந்து வெற்றியை பெறுவது எப்படி என்பது இந்தியாவுக்கு தெரியும்"

"இந்தியா ஒரு கட்டத்தில் பின்பற்றாத நிலையில் தற்போது முதல் முறையாக, நாங்கள் உதாரணத்தை வகுக்க

Posted On: 19 FEB 2024 12:37PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ கல்கி கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். ஸ்ரீ கல்கி கோயில் நிறுவன அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி கோயில் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில்  அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பகவான் ஸ்ரீ ராமர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரின் பூமி இன்று மீண்டும் ஒருமுறை பக்தி, உணர்வு மற்றும் ஆன்மீகத்தால் நிரம்பியுள்ள நிலையில், மற்றொரு குறிப்பிடத்தக்க புனித யாத்திரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று கூறினார். சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதில் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்த திரு மோடி, இது இந்திய ஆன்மீகத்தின் புதிய மையமாக உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும், யாத்ரீகர்களுக்கும் பிரதமர் திரு மோடி தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்தக் கோயிலின் திறப்பு விழாவிற்காக, 18 ஆண்டுகள் காத்திருப்பது குறித்து குறிப்பிட்ட பிரதமர், தாம் நிறைவேற்ற வேண்டிய பல நல்ல பணிகள் எஞ்சியிருப்பதாகத் தோன்றுகிறது என்று தெரிவித்தார். மக்கள், துறவிகளின் ஆசீர்வாதத்துடன் முடிக்கப்படாத பணிகளைத் தாம் தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்று அவர் கூறினார்.

இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தி என்று குறிப்பிட்ட பிரதமர், இன்றைய கலாச்சார மறுமலர்ச்சி, பெருமை, நமது அடையாளம் மீதான நம்பிக்கை ஆகியவற்றிற்காக சிவாஜி மகராஜைப் பாராட்டினார். சத்ரபதி சிவாஜி மகராஜுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

கோயிலின் கட்டிடக்கலை பற்றி விளக்கிய பிரதமர், கோயிலில் 10 கர்ப்ப கிரகங்கள் இருக்கும் என்றும், அங்கு இறைவனின் 10 அவதாரங்களும் இடம் பெறும் என்றும் கூறினார். இந்த 10 அவதாரங்கள் மூலம், மனித வடிவம் உட்பட கடவுளின் அனைத்து வடிவங்களையும் வேதங்கள் வழங்கியுள்ளன என்று பிரதமர் திரு மோடி விளக்கினார். "வாழ்க்கையில், இறைவனின் உணர்வை அனுபவிக்க முடியும்", என்று தொடர்ந்த பிரதமர், நாம் இறைவனை சிங்கம், வராகம் மற்றும் ஆமை வடிவில் உணர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார். இறைவனின் இந்த வடிவங்கள் மக்கள் இறைவனை அங்கீகரிப்பதின் முழுமையான உருவத்தை வழங்கும் என்று அவர் கூறினார். ஸ்ரீ கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்ட வாய்ப்பளித்த இறைவனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து துறவிகளுக்கும் அவர்களின் வழிகாட்டுதலுக்காக தலைவணங்கிய பிரதமர், திரு. ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணத்திற்கு நன்றி தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சி இந்தியக் கலாச்சார மறுமலர்ச்சியில் மற்றொரு தனித்துவமான தருணம் என்று பிரதமர் கூறினார். அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம், அபுதாபியில் அண்மையில் கோயில் திறப்பு விழா ஆகியவற்றைக் குறிப்பிட்ட பிரதமர், கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்த விஷயம் தற்போது நனவாகியுள்ளது என்று கூறினார்.

இதுபோன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து வருவதன் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். ஆன்மீக மறுமலர்ச்சி குறித்து தொடர்ந்து பேசிய அவர், காசியில் உள்ள விஸ்வநாதர் கோயில், காசியின் புனரமைப்பு, மகாகால் மஹாலோக், சோம்நாத், கேதார்நாத் கோயில் பற்றி குறிப்பிட்டார். வளர்ச்சியுடன் கூடிய பாரம்பரியம் என்ற தாரக மந்திரத்துடன் நாம் முன்னேறி வருகிறோம் என்று அவர் கூறினார். ஆன்மீக மையங்களின் மறுமலர்ச்சியை உயர் தொழில்நுட்ப நகர்ப்புற உள்கட்டமைப்பு, கோயில்கள், புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல், வெளிநாட்டு முதலீட்டுடன் வெளிநாட்டிலிருந்து கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைத்தல் ஆகியவற்றை அவர் மீண்டும் குறிப்பிட்டார். காலச் சுழற்சி நகர்வதை இது குறிப்பிடுவதாக அவர் தெரிவித்தார். செங்கோட்டையிலிருந்து தாம் விடுத்த அழைப்பை நினைவுகூர்ந்த பிரதமர், "இதுதான் தருணம், இதுவே சரியான தருணம்" என்று கூறினார்.

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் குடமுழுக்கு விழாவை நினைவு கூர்ந்த பிரதமர், 2024 ஜனவரி 22 முதல் புதிய காலச் சக்கரம் தொடங்கப்பட்டதாக மீண்டும் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த ஸ்ரீ ராமரின் ஆட்சியின் தாக்கத்தை எடுத்துரைத்தார். இதேபோல், குழந்தை ராமர் இப்போது அமர்ந்திருப்பதன் மூலம், இந்தியா தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறது, அங்கு விடுதலைப் பெருவிழா அமிர்த காலத்தில்   வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தீர்மானம் வெறும்  விருப்பம் அல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்தத் தீர்மானத்தின் மூலம் வாழ்ந்துள்ளது" என்று பிரதமர் கூறினார். ஸ்ரீகல்கியின் வடிவங்கள் குறித்த ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணத்தின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பற்றி பேசிய பிரதமர், அதன் அம்சங்களையும், சாஸ்திர அறிவையும் எடுத்துரைத்தார். பகவான் ஸ்ரீ ராமரைப் போலவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கல்கியின் வடிவங்கள்தான் எதிர்காலத்தின் பாதையை நிர்ணயிக்கும் என்று தெரிவித்தார்.

கல்கி, காலச் சக்கரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மட்டுமல்ல, உத்வேகம் அளிக்கும் ஆதாரமாகவும் திகழ்கிறார் என்று பிரதமர் குறிப்பிட்டார். கல்கி  கோயில் இன்னும் அவதரிக்காத இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட  இடமாக இருக்கப் போகிறது என்று அவர் கூறினார். எதிர்காலத்தைப் பற்றிய இத்தகைய கருத்து நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேதங்களில் எழுதப்பட்டது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த நம்பிக்கைகளை முழு நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் சென்றதற்காகவும், அதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காகவும் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணத்தை திரு மோடி பாராட்டினார். கல்கி கோயிலை நிறுவுவதற்காக முந்தைய அரசுகளுடன் ஆச்சார்யா நடத்திய நீண்ட போராட்டத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்காக நீதிமன்றத்திற்கு சென்றதையும் குறிப்பிட்டார். ஆச்சார்யா அவர்களுடன் அண்மையில் தாம் நடத்திய கலந்துரையாடலை நினைவுகூர்ந்த பிரதமர், அவரை ஒரு அரசியல் பிரமுகராக மட்டுமே அறிந்திருந்ததாகவும், ஆனால் மதம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பை அறிந்து கொண்டதாகவும் கூறினார். தற்போது, பிரமோத் கிருஷ்ணம் அவர்கள் மன அமைதியுடன் கோயிலின் பணிகளைத் தொடங்க முடிந்தது என்று கூறிய பிரதமர், சிறந்த எதிர்காலத்தை நோக்கிய தற்போதைய அரசின் நேர்மறையான கண்ணோட்டத்திற்கு இந்தக் கோயில்  ஒரு சான்றாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தோல்வியிலிருந்து வெற்றி பெறுவது ப்படி என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்று பிரதமர் கூறினார். இன்றைய இந்தியாவின் அமிர்த காலத்தில், இந்தியாவின் பெருமை, உயரம் மற்றும் வலிமையின் விதை முளைத்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார். துறவிகள், மதத் தலைவர்கள் புதிய கோயில்களை நிர்மாணித்து வருவதால், நாட்டின் கோயிலை நிர்மாணிக்கும் பணி தனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.  நாடு என்னும் கோயிலின் மகிமையின் மகத்துவம் மற்றும் விரிவாக்கத்திற்காக நான் இரவும் பகலும் உழைத்து வருகிறேன் என்று அவர் மேலும் கூறினார். இந்தியா ஒரு கட்டத்தில் பின்பற்றாத நிலையில் தற்போது முதல் முறையாக, நாங்கள் உதாரணத்தை வகுக்கிறோம் என்று பிரதமர் திரு மோடி தெரிவித்தார். இந்த உறுதிப்பாட்டின் முடிவுகளைப் பட்டியலிட்ட பிரதமர், டிஜிட்டல் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியா மாறி வருகிறது, இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது, சந்திரயான் வெற்றி, வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் போன்ற நவீன ரயில்கள், வரவிருக்கும் புல்லட் ரயில்கள், உயர் தொழில்நுட்ப நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளின் வலுவான கட்டமைப்பு ஆகியவற்றை அவர்  குறிப்பிட்டார். இந்தச் சாதனை இந்தியர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது என்றும், நாட்டின் மீதான நேர்மறையான சிந்தனை, நம்பிக்கையின் இந்த அலை ஆச்சரியமாக இருக்கிறது. அதனால்தான் இன்று நமது திறன்கள் எல்லையற்றவையாக உள்ளன, நமக்கான சாத்தியங்களும் மகத்தானவை என்று அவர் கூறினார்.

ஒரு நாடு கூட்டு முயற்சியின் மூலம் வெற்றிபெறும் சக்தியைப் பெறுகிறது என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தற்போது இந்தியாவில் ஒரு மகத்தான கூட்டு உணர்வு இருப்பதாக அவர் கூறினார். ஒவ்வொரு குடிமகனும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள், 11 கோடி கழிப்பறைகள், 2.5 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் நீர், 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் உணவு, 10 கோடி பெண்களுக்கு மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள், 50 கோடி ஆயுஷ்மான் அட்டைகள், 10 கோடி விவசாயிகளுக்கு வேளாண் வருவாய் ஆதரவு நிதி, பெருந்தொற்று காலத்தில் இலவசத் தடுப்பூசி, தூய்மை இந்தியா ஆகிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அரசுப் பணிகளில் விரைவு, ஏராளமான பணிகள் ஆகியவற்றுக்காக நாட்டு மக்களைப் பிரதமர் பாராட்டினார். இன்றைய மக்கள் அரசின் திட்டங்களின் பலன்களை ஏழைகள் பெற உதவுவதுடன், 100 சதவீதம் நிறைவு பெறுவதற்கான இயக்கத்தில் பங்கேற்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஏழைகளுக்குச் சேவை செய்யும் உணர்வு, இந்தியாவின் ஆன்மீக விழுமியங்களிலிருந்து உருவானது என்று குறிப்பிட்ட அவர், மக்களிடையே கடவுள் இருப்பது என்பதற்கு ஊக்கமளிக்கிறது என்றார். 'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குதல்' மற்றும் 'நமது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வது' ஆகிய ஐந்து கொள்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தியா எப்போதெல்லாம் பெரிய தீர்மானங்களை எடுக்கிறதோ, அப்போதெல்லாம் அதை வழிநடத்த தெய்வீக உணர்வு நம்மிடையே ஏதாவது ஒரு வடிவத்தில் வருகிறது என்று பிரதமர் கூறினார். கீதையின் தத்துவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இடைவிடாத செயல்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார். "இந்த 'டமைப்பாதை காலத்தில்' அடுத்த 25 ஆண்டுகளுக்கு, நாம் கடின உழைப்பின் உச்சத்தை அடைய வேண்டும். நாட்டுக்கான சேவையை முன்னணியில் வைத்து தன்னலமின்றி பணியாற்ற வேண்டும். நமது ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டிற்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி முதலில் நம் மனதில் வர வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்தக் கேள்வி நாட்டின் அனைத்துச் சவால்களுக்கும் தீர்வுகளை வழங்கும்  என்று கூறி து உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத், ஸ்ரீ கல்கி கோயிலின் பீடாதிபதி ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

***

ANU/PKV/IR/AG/DL



(Release ID: 2007081) Visitor Counter : 83